கோண்வால் சிவன் ஆலயம் கனடா
அன்பார்ந்த மெய் அடியார்களே!!
என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு இவ் ஆலயம் தொடர்பாக ஒரு சிறு விளக்கத்தை உங்கள் முன் வைக்கிறேன்.!!
எனது தந்தையார் திரு. வேலாயுதம்பிள்ளை சண்முகலிங்கம் அவர்கள் ஒரு பரம சிவ பக்தன். நானும் எனது தந்தையின் வழியைப்பின்பற்றி 2015ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 21ஆம் திகதி இவ் ஆலயத்தில் சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்தேன்.
சிவலிங்கத்தை வைக்கும் பொழுது எந்தவிதமான ஐதீக முறையிலோ அல்லது சைவ ஆச்சார விதிமுறையோ அல்லது சைவ ஆகம விதி முறைப்படியோ பிரதிஸ்டை செய்யப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
இவ் ஆலயம் எனது சொந்த விருப்பத்துக்கு அமையப்பெற்றுது. எனது தாயார் நித்தியலட்சுமி சண்முகலிங்கம் அவர்களின் விருப்பத்திற்கு அமைய தற்பொழுது இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பெற்றது.
இவ்வாலயம் எந்தவிதமான வியாபார நோக்கமற்றது என்பதனை இத்தால் உறுதிசெய்கிறேன். இதில் ஏதும் குறை இருப்பின் தயவுசெய்து மன்னித்துக்கொள்ளவும்
நன்றி
சிவரூபன் சண்முகலிங்கம்