1730 VINCENT MASSEY DRIVE, CORNWALL, ON K6H 5R6 CANADA
Mon-Sat: 9.00am To 7.00pm
பின்தொடர :
தொடர்புகள் +1 (416) 939-4921

திருவாதிரை விரதம்

திருவாதிரை விரதம்

திருவாதிரை விரதம் மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிவரும் திருவாதிரையில் கடைப்பிடிக்கப்படுகிறது. திருவாதிரையைக் கொண்டே இறைவனார் ஆதிரையன் என்றழைக்கப்படுகிறார்.

இவ்விழா சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. தாருகாவனத்து முனிவர்களின் செருக்கினை அடக்கி இறைவன் ஆடிய திருநடனம் மற்றும் பதஞ்சலி, வியாக்கிரதபாதர் ஆகியோருக்காக இறைவன் ஆடிய திருநடனம் திருவாதிரை நாளில் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது.

இன்றைய தினத்தில் அதிகாலையில் சிவாலய தரிசனம் சிறப்பு. ஒருவேளை மட்டும் உணவு உண்ண வேண்டும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

இவ்விரதத்தில் இறைவனுக்கு களியும், ஏழுகறிக்கூட்டும் படைக்கப்படுகிறது. இவ்விரதமுறையை மேற்கொள்வதால் புகழ், நீடித்த ஆயுள், செல்வம், நோயின்மை, மகிழ்ச்சியான திருமண வாழ்வு ஆகியவை கிடைக்கும். மேலும் நடனக்கலையிலும் சிறக்கலாம்.

இவ்விரத வழிபாட்டில் ஆடலரசனான நடராஜர் வழிபடப்படுகிறார்.