1730 VINCENT MASSEY DRIVE, CORNWALL, ON K6H 5R6 CANADA
Mon-Sat: 9.00am To 7.00pm
பின்தொடர :
தொடர்புகள் +1 (416) 939-4921

சோமவார விரதம்

சோமவார விரதம்

இவ்விரதம் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் தொடங்கப்பட்டு பின் திங்கட்கிழமை தோறும் பின்பற்றப்படுகிறது. சாபத்தினால் ஒளியிழந்த சோமனான சந்திரன் இவ்விரதம் மேற்கொண்டு தேய்ந்து வளரும் நிலையைப் பெற்றான். மேலும் பிறைச்சந்திரனாக இறைவனின் திருமுடியை அலங்கரிக்கும் பாக்கியத்தையும் பெற்றான்.

சோமன் பின்பற்றி நற்கதி பெற்ற விரதமாயின் இது சோமவார விரதம் என்றழைக்கப்படுகிறது. சந்திரனைச் சூடியதால் இறைவன் சந்திரசேகரன், சந்திமௌலி என்று அழைக்கப்படுகிறார்.

இவ்விரதமுறையில் பகலில் உண்ணாமல் காலை மற்றும் மாலை வேளையில் சிவலாயம் சென்று வழிபடவேண்டும். தன்னால் முடிந்தளவுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இரவில் உணவருந்தி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும். இத்தினத்தில் கணவன் மனைவி இணைந்து சிவாலயம் சென்று வருவது சிறப்பான பலனைத் தரும்.

இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் ஆயுள்விருத்தி, மனஅமைதி, ஐஸ்வர்யம், தகுந்த துணையுடன் கூடிய நல்ல வாழ்க்கை கிடைக்கும்.