1730 VINCENT MASSEY DRIVE, CORNWALL, ON K6H 5R6 CANADA
Mon-Sat: 9.00am To 7.00pm
பின்தொடர :
தொடர்புகள் +1 (416) 939-4921

மகாசிவராத்திரி விரதம்

மகாசிவராத்திரி விரதம்

இவ்விரதம் மாசி மாதம் பௌர்ணமி முடிந்த பதினான்காம் நாளான தேய்பிறை சதுர்த்தசி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரதத்தினை ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் எல்லோரும் கடைப்பிடிக்கலாம்.

சிவபெருமானை நினைத்து இவ்விரத வழிபாடுகளை மேற்கொண்டால் இம்மை மற்றும் மறுமைகளில் நற்கதியை பெறுவதோடு முக்தியையும் பெறலாம்.

சிவபெருமானை நினைத்து மேற்கொள்ளும் விரதமுறைகளில் இவ்விரதம் முதன்மையானது. இவ்விரதமுறையில் சிவராத்திரிக்கு முதல்நாள் ஒருவேளை உணவு உண்டு சிவராத்திரி அன்று முழுவதும் உணவு உண்ணாமல் இருக்கின்றனர். அன்று காலையில் குளித்து சிவாலய வழிபாடு செய்து, பகல் முழுவதும் இறைநினைப்புடன் நமசிவாய மந்திரத்தை கூறுகின்றனர்.

இரவில் நடைபெறும் நான்கு கால சிவ வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர். வழிபாட்டின்போது தேவாரம், திருவாசம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள் பாடப்படுகின்றன.

மறுநாள் காலையில் குளித்துவிட்டு சிவாலய தரிசனம் செய்து பின் சிவனடியவர்களுடன் உணவருந்தி விரதத்தினை நிறைவு செய்கின்றனர்.

இவ்விரதமுறையைப் பின்பற்றவதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி நல்வாழ்கை பெறுவதோடு பிறவாமை என்கின்ற முக்தியும் சிவனருளால் கிடைக்கப் பெறும்.

இவ்விரதத்தின்போது சிவனின் மூர்த்தங்களான சோமஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சந்திரசேகரர் ஆகியோர் வழிபடப்படுகின்றனர்.